காட்டில் உயிர்வாழ வலிமை மட்டும் போதாது, சமயோசித புத்திசாலித்தனமும் தைரியமும் மிக அவசியம் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவின் மலாமாலா வனப்பகுதியில், சுமார் 20 சிங்கங்கள் சேர்ந்து ஒரு எருமையை வேட்டையாடி கூட்டமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன.

பொதுவாக சிங்கங்கள் வேட்டையாடும் இடத்திற்கு அருகில் மற்ற விலங்குகள் செல்ல அஞ்சும் நிலையில், அங்கு வந்த ஒரு எருமைக் கூட்டம் முதலில் தயங்கி நின்றது. ஆனால், கூட்டத்திலிருந்து திடீரென முன்னேறி வந்த ஒரு தைரியமான எருமை, சிங்கங்களை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்தது. ஒரு எருமையின் இந்த எதிர்பாராத துணிச்சலைக் கண்டு மிரண்டு போன சிங்கங்கள், தங்கள் இரையை அப்படியே விட்டுவிட்டு நாலாபுறமும் சிதறி ஓடின.

வனவிலங்கு புகைப்படக் கலைஞர் டியான் கெல்ப்ரிக் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த 21 வினாடி வீடியோ, காட்டின் விதிகள் எப்போதும் பலசாலிகளுக்கு சாதகமாக இருப்பதில்லை என்பதைக் காட்டுகிறது. ஒரு கட்டத்தில் அனைத்து சிங்கங்களும் பின்வாங்கினாலும், ஒரே ஒரு சிங்கம் மட்டும் எருமையை எதிர்த்து நிற்க முயன்றது; இருப்பினும் அந்த எருமை சற்றும் தளராமல் அதை விரட்டியடித்தது.
<a href=”http://

“>
வீடியோவின் இறுதியில் சிங்கங்கள் மீண்டும் எருமையைத் துரத்தினாலும், அந்த ஒரு தருணத்தில் ஒற்றை எருமை காட்டின் ராஜாக்களான சிங்கங்களின் கர்வத்தை அடக்கிவிட்டது. அளவு மற்றும் எண்ணிக்கையை விட, சரியான நேரத்தில் எடுக்கப்படும் துணிச்சலான முடிவே வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகும்.