சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, வாயில்லா ஜீவன்களிடம் கொடூரமாக நடந்துகொள்பவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் சாலையில் நின்றிருந்த ஒரு நாய்க்குட்டியை மிகக் கொடூரமாக எட்டி உதைத்து கால்பந்து போல தூக்கி வீசுகிறார்.
இதைக் கண்ட அங்கிருந்த இளம் பெண் ஒருவர், துணிச்சலுடன் அந்த நபரிடம் ஓடிச் சென்று அவரைத் தனது காலால் எட்டி உதைத்து பதிலடி கொடுக்கிறார். அதோடு நில்லாமல், அங்கிருந்த நாற்காலியைத் தூக்கிக்கொண்டு அந்த நபரை அடிக்கத் துரத்துகிறார். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ ‘X’ தளத்தில் பகிரப்பட்ட சில நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. நாய்க்குட்டியைத் துன்புறுத்திய அந்த நபருக்குப் பெண் கொடுத்த பதிலடியைக் கண்ட இணையவாசிகள், “இதுதான் உடனடி கர்மா” என்று பாராட்டி வருகின்றனர்.
“வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்துபவர்கள் மனிதர்களே அல்ல” என்றும், அந்தப் பெண்ணின் தைரியமான செயலுக்குத் தலைவணங்குவதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
इसे कहते हैं करारा जवाब।
बेजुबान पर लात उठाई, तो लड़की ने उसकी औकात दिखाई। इसे कहते हैं ‘Instant Karma’। pic.twitter.com/scMOoDwAUx
— Shagufta khan (@Digital_khan01) January 15, 2026
“>
விலங்குகளிடம் காட்டும் அன்பும், அநீதியைக் கண்டால் பொங்கியெழும் குணமும் மிக அவசியம் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.
