இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, வாழ்க்கையின் ஆழமான உண்மையைச் சொல்லி பலரையும் நெகிழ வைத்துள்ளது. அந்த வீடியோவில், பெய்யும் மழையில் முட்டை வண்டிக்கு அருகே ஒரு முதியவர் அமைதியாக நின்று கொண்டிருக்கிறார்.

அந்த காட்சியின் மேல், “அனுபவிக்கப் போவது நாம் தான் எனும் போது, அதை மற்றவர்களிடம் சொல்லி என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த ஒரு வரி, ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்களையும், அந்த வலியைத் தனிமையில் தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும் பிரதிபலிப்பதாக உள்ளது.

அனிஷா ஷாஹி என்ற டிஜிட்டல் கிரியேட்டர் பகிர்ந்த இந்த வீடியோ, இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்று இணையத்தை அதிர வைத்துள்ளது.

“வலிகள் கசப்பானவை, ஆனால் இதுதான் நிஜமான உண்மை” என நெட்டிசன்கள் பலரும் உருக்கமாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Anisha Shahi (@_shahi_anisha)

“>

மற்றவர்களிடம் குறைகளைச் சொல்லிப் புலம்புவதை விட, அமைதியாக இருந்து தன் போராட்டத்தைத் தானே எதிர்கொள்வதே சிறந்தது என்ற கருத்தை இந்த வீடியோ ஆழமாகப் பதிவு செய்துள்ளது.