சென்னையில் பொதுவாக மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி மக்களுக்கு பெரும் சேர்மத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதனால் மழைநீர் செல்ல ஏதுவாக அனைத்து பகுதிகளிலும் மழை நீர் வடிகால் அமைக்க முடிவு செய்யப்பட்டு தற்போது மண்டல வாரியாக மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே மழை நீர் வடிகாலில் குடியிருப்பு வாசிகள் சிலர் கழிவுநீர் இணைப்புகளை அமைத்து மழைநீர் செல்ல வேண்டிய பாதையில் கழிவுநீரை வெளியேற்றி வருகிறார்கள்.

இது தொடர்பாக மாநகராட்சிக்கு பல புகார்கள் வந்ததை தொடர்ந்து அதிகாரிகள் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது மழை நீர் வடிகால் கழிவு நீர் இணைப்பு உள்ளது தெரிய வந்ததை தொடர்ந்து சட்ட விரோதமாக மழை நீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றுபவர்களுக்கு மாநகராட்சி சார்பாக அபராத விதிக்கப்பட்டது. இதுவரை 15 மண்டலங்களில் சுமார் 5 லட்சத்திற்கும் மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ள நிலையில் இனியும் இந்த தவறை செய்தால் அபராதத்துடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மக்களுக்கு மாநகராட்சி எச்சரித்துள்ளது.