தமிழகத்தில் பொதுவாக கோடைகாலம் தொடங்கியவுடன் சுற்றுலா பயணிகள் அனைவரும் உதகைக்கு படையெடுக்க தொடங்கி விடுவார்கள். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தருவது வழக்கம். அதனால் மலை பாதைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோடை சீசன் காரணமாக ஊட்டி மலைப்பகுதி ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் உதகையிலிருந்து கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் கேத்தகிரிவழியாக வரலாம் என்றும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து உதகை செல்லும் வாகனங்கள் குன்னூர் வழியாக செல்ல வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.