தமிழகத்தில் நடக்கும் ஆண்டிற்கான தேர்வுகள் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒன்னு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி தேர்வுகள் முடிவடையும் நிலையில் ஏப்ரல் 29 முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமைதான ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் வரும் கல்வியாண்டில் பள்ளிகளில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும், அரசு பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கைகள், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி மற்றும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவற்றை கலந்து பேசி முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.