தென்னிந்திய சினிமா அளவில் தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது ஹீரோவாகவும் வில்லனாகவும் பல திரைப்படங்களில் மிரட்டி வருகிறார். ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வருகின்றது. அங்கு தன்னை காண வந்த ரசிகைக்கு விஜய் சேதுபதி செய்த உதவியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

படப்பிடிப்பில் விஜய் சேதுபதியை சந்தித்த பெண், தனக்கு வேலை தருவதாக அழைத்து வந்து தவிக்க விட்டதாக அவரின் கஷ்டத்தை கூறியுள்ளார்.உடனே விஜய் சேதுபதி அந்த பெண்ணுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இவரின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.