தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி, தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பின் ரஜினியின் 170 வது படத்தை இயக்குனர் TJ ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தையும் லால் சலாம் திரைப்படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில் ரஜினி தன் 170 மற்றும் லால் சலாம் படத்திற்கும் பேசப்பட்டுள்ள சம்பளம் விவரம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ரஜினி 2 படத்திற்கும் சேர்த்து ரூ.105 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ரிலீஸ் ஆன அண்ணாத்த திரைப்படத்திற்கு ரஜினி ரூ.110 கோடி சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.