பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் சென்ற 16-ம் தேதி வெளியான படம் “ஆதிபுருஷ்”. இராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை பிரபல இயக்குனர் ஓம் ராவத் இயக்கி இருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் எழுத்தாளர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் மும்பை காவல்துறைக்கு அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.