காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மருத்துவமனை சேர்மன் டி எஸ் ராணா கூறுகையில், அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல் நலம் சீராக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.