தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளுக்குப் பிறகு திமுக – காங்கிரஸ் இடையேயான பந்தம் அடியோடு உடையத் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான ஜோதிமணி தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிரடிப் பதிவு ஒட்டுமொத்த அறிவாலயத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

“திமுக கூட்டணியில் இருந்து பரஸ்பர மரியாதையோடு காங்கிரஸ் பிரிவதுதான் இரு தரப்புக்குமே நல்லது” என்று ஓப்பனாகப் பேசியுள்ள ஜோதிமணி, கடந்த கால அரசியல் வரலாற்றையும் திமுக-வுக்குச் சுட்டிக்காட்டியுள்ளார். “கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பிற்குச் சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு, எங்களைக் கூட்டணியில் இருந்து திமுக திடீரென வெளியேற்றியது; ஆனால், அப்போது நாங்கள் திமுக-வை இந்த அளவிற்கு மிகக் காட்டமாக விமர்சிக்கவில்லை என்பதை திமுக நினைவில் கொள்ள வேண்டும்” எனப் பொங்கியுள்ளார்.

மேலும், இரு தரப்புமே தடித்த வார்த்தைகளைப் பேசிச் சேற்றை வாரி இறைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் நலன் மற்றும் எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டுதான் தவெக-வுக்கு ஆதரவளிக்கும் இந்த மாபெரும் அரசியல் முடிவைக் காங்கிரஸ் எடுத்துள்ளதாகவும் ஜோதிமணி மிகத் தெளிவாகத் தனது பதிவில் விளக்கியுள்ளார்.

திமுக-வின் நீண்ட கால நட்பு முறிந்து, தவெக-வுடன் கை கோர்க்கும் வேளையில் ஜோதிமணி பேசியுள்ள இந்த ‘டீசன்டான பதிலடி’ சோஷியல் மீடியாவை அதிர வைத்து வருகிறது.

“>