தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடித்த வேளையில், தவெக தலைவர் விஜய் கோட்டையைக் கைப்பற்றுவதற்கான மெகா அரசியல் நகர்வாகக் காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவையும் தவெக-வுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது.
தவெக 108 இடங்களையும், திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் பெற்றுள்ள நிலையில், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்த 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் தங்களது கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதத்தை விஜய் முன்னிலையிலேயே சமர்ப்பித்துள்ளனர்.
இதனால் தவெக-வின் தற்போதைய பலம் 113 ஆக உயர்ந்து ஆட்சி அமைப்பதற்கான இலக்கை நோக்கி நெருங்கியுள்ள நிலையில், இதே பனையூர் அலுவலகப் பகுதிக்குக் காரில் வந்து புறப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம், “தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?” எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்; அதற்கு அவர் எதார்த்தமாகப் புன்னகைத்தபடியே “வணக்கம், நன்றி” என்று கூறி நழுவியது அரசியல் வட்டாரத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் இடதுசாரிகள், விசிக மற்றும் அதிமுக கூட்டணியில் வென்ற பாமக ஆகியோரின் ஆதரவைப் பெற விஜய் தொடர்ந்து தீவிரமாகப் பேசி வரும் சூழலில், காங்கிரஸின் இந்தத் தூது தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது.
