சாலையில் நடக்கும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதிர்ச்சிகரமான ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் பலரையும் கலங்கடித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த 17 வினாடி வீடியோவில், ஒருவர் மொபைலில் பேசிக்கொண்டே சாலையைக் கடக்க முயல்வதை காணலாம். மொபைலில் முழுமையாக மூழ்கியிருந்த அவர் மீது எதிர்புறம் வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனம் மீது மோதியது.

 

விபத்தில் பைக் ஓட்டுநர்கள் இருவரும் மற்றும் அந்த நபரும் படுகாயமடைந்தனர். இருப்பினும் மூவரும் உயிருடன் மீட்கப்பட்டனர் என்பது அதிர்ஷ்டம் எனலாம். விபத்திற்கான முக்கிய காரணம், நடந்து செல்லும் நபர் மொபைலில் பேசுவதால் கவனச்சிதறல் ஏற்பட்டதுதான் என கூறப்படுகிறது.

இந்த வீடியோவை “@mktyaggi” என்ற சமூக ஊடக பயனர் பகிர்ந்துள்ளார். அதில், “வாகனம் ஓட்டும்போது மொபைலைப் பயன்படுத்த வேண்டாம். யமன் அடுத்த முக்கோணத்தில் உங்களுக்காக காத்திருக்கிறார்” என்ற எச்சரிக்கையான வாசகம் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காணொளி இதுவரை 36,000 முறை பார்வையிடப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். பலரும் இந்த சம்பவத்தை தொடர்ந்து தங்கள் கோபத்தையும் கவலையையும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.