கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று இரவு விநாயகர் சிலை ஊர்வலத்தில் கொடூர விபத்து ஏற்பட்டது.
ஒரு பைக் மீது மோதுவதை தவிர்க்க முயன்ற லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சென்டர்மீடியனை உடைத்துக்கொண்டு ஊர்வலத்தில் பங்கேற்ற மக்களை வேகமாக மோதியது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், 25-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்தார். அதேபோல், மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.
