கிரேட்டர் நொய்டாவில் உள்ள நாலேஜ் பார்க் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கல்வி நிறுவனத்தில், பாரா-மெடிக்கல் பயிலும் மாணவி ஒருவர், மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் நடந்தது. மற்ற மாணவிகள் சரியான நேரத்தில் அவரைப் பிடித்ததால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்த கல்வி நிறுவனம் டெல்லியைச் சேர்ந்த சந்தீப் கோயல் என்பவருக்கு சொந்தமான கைலாஷ் இன்ஸ்டிடியூட் ஆகும். சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறை விரைந்து வந்து மாணவியை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது.
ग्रेटर नोएडा के नॉलेज पार्क में पैरामेडिकल की छात्रा ने की ख़ुदकुशी की कोशिश
◆ सहपाठियों से विवाद के बाद कॉलेज की दूसरी मंजिल से कूदने का प्रयास किया
◆ कॉलेज स्टाफ और छात्रों ने उसे समझाकर नीचे उतारा#GreaterNoida | Noida | Greater Noida pic.twitter.com/iUwJQzF9sE
— News24 (@news24tvchannel) September 12, 2025
காவல் துறையின் விசாரணையில், மாணவிக்கு கல்லூரியில் உள்ள சில மாணவிகளுடன் பண பரிவர்த்தனை தொடர்பாக தகராறு இருந்தது தெரியவந்தது. பணத்தைக் கேட்டு அழுத்தம் கொடுக்கப்பட்டதால், மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. நாலேஜ் பார்க் காவல் நிலைய பொறுப்பாளர் சர்வேஷ் சந்திரா, மாணவிக்கு ஆலோசனை வழங்கப்பட்டு, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறினார். இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது, அதில் மாணவி மூன்றாவது மாடியில் ஜன்னல் அருகே ஏறி நிற்பது பதிவாகியுள்ளது. மற்ற மாணவர்கள் அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கும் காட்சிகளும் வீடியோவில் உள்ளன. மாணவியின் தந்தை, பண பரிவர்த்தனை பிரச்னையை மாணவி தங்களிடம் மறைத்ததாகவும், கல்லூரி நிர்வாகத்தின் மீது எந்த புகாரும் இல்லை என்றும் தெரிவித்தார்.
