குஜராத் மாநிலத்தின் சூரத்தில் உள்ள ஜஹாங்கிர்புரா பகுதியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு சோகமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பள்ளி வேன், தெருவை கடக்க முயன்ற 1.5 வயது சிறுமி மீது மோதிய அதிர்ச்சி சம்பவம், அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிசிடிவி காட்சிகளின்படி, சிறுமி தனது வீட்டிலிருந்து வெளியே வந்து, வீதியை கடக்க முயன்றபோது, வேனின் ஓட்டுநர் கவனக்குறைவால் வாகனத்தை நேராக சிறுமியின் மீது மோதுகிறார். தெருவின் நடுப்பகுதிக்குள் சென்ற சிறுமி, வேனின் கீழ் சிக்கி விட்டார். இதைப் பார்த்த அவரது தாய் மற்றும் அப்பகுதியினர் உடனடியாக விரைந்து சென்று சிறுமியை காப்பாற்றினர்.
வேனின் ஓட்டுநர் வாகனத்தை உடனடியாக நிறுத்தினார். சிறுமி காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
இதேபோன்று கடந்த மாதம் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவிலும், வீடுகளுக்கு வெளியே நின்றிருந்த மூன்று குழந்தைகளில் இருவர் மீது ஒரு கார் மோதியதோடு, மற்றொரு குழந்தை காயமடைந்தது. அந்தச் சம்பவத்திலும் ஓட்டுநர் வெகுஜன இடத்தில் வேகமாக வாகனத்தை ஓட்டியதே காரணமாகக் கூறப்படுகிறது. மேலும் தற்போது சிறுமி மீது வேன் மோதிய காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
સુરતમાં અઢી વર્ષની બાળકી પર ફરી વળી વાન, હચમચાવતો વીડિયો સામે આવ્યો#surat #suratnews #cctv #shockingcctv #viralvideo #vtvdigital pic.twitter.com/S6fCW0LGQS
— VTV Gujarati News and Beyond (@VtvGujarati) September 12, 2025
