தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சீனிவாசநல்லூர் கீழத்தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக இருக்கிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த கார்த்திகேயன் தனது மனைவியை கட்டையால் தாக்கியுள்ளார்.

இதனை தடுக்க வந்த மாமியார் மஞ்சுளாவையும் கார்த்திகேயன் கட்டையால் தாக்கி மண்டையை உடைத்ததாக தெரிகிறது. இதனால் படுகாயம்டைந்த ரம்யா, மஞ்சுளா ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.