கோலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல டைரக்டர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் தனித்துவமான கதைகளை இயக்கி தனக்கென தனியிடம் பிடித்து எக்கச்சக்க ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார். இப்போது படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

இதனிடையில் எப்போதும் சமூகவலைதளபக்கங்களில் சுறுசுறுப்பாக இருந்து வரும் செல்வராகவன் மற்றும் அவரது மனைவி கீதாஞ்சலி ஆகிய இருவரும் அவ்வப்போது தங்களது குடும்ப புகைப்படங்களை பதிவு செய்து வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதன்படி செல்வராகவன் தன் மனைவி உடன் ஸ்கை பார்க்கில் அந்தரத்தில் பறக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.