நவி மும்பையின் கார்கர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் நபர் ஒருவர், அங்கிருந்த வளர்ப்புப் பூனை ஒன்றை மிகவும் கொடூரமான முறையில் பிளாஸ்டிக் பைக்குள் கட்டாயப்படுத்தி திணித்து, அதைத் தன் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளார்.

இந்த அதிர்ச்சியூட்டும் விலங்கு வதைத் துயரம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பூனையின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அதுவரை அமைதியாக இருந்த அந்தப் பகுதி மக்கள் இந்த கொடூரச் செயலைக் கண்டு கடும் கொந்தளிப்படைந்துள்ளனர்.

“>

இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் உடனடியாக கார்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விலங்குகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த நபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் வாயில்லா ஜீவன்களுக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற அத்துமீறல்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், கடத்தப்பட்ட பூனையை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.