மத்தியப் பிரதேச மாநிலம் முரைனாவில் தலித் இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த கொடுமை மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. பண விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அந்த இளைஞரை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, அந்த இளைஞரை மிகக் கேவலமான முறையில் அநாகரீகச் செயல்களைச் செய்யச் சொல்லி துன்புறுத்தியுள்ளனர். இந்த அருவருக்கத்தக்கச் செயலை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டதால் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
MP : मुरैना जिले में पैसे न देने के विवाद में एक दलित युवक के साथ अमानवीय और अपमानजनक व्यवहार का मामला सामने आया है
◆ युवक को मुर्गा बनाकर थप्पड़ मारे गए और उससे अश्लील हरकतें कराई गईं, घटना का वीडियो सामने आने के बाद पुलिस ने जांच शुरू कर दी है
◆ पीड़ित युवक आरोपी की ही गली… pic.twitter.com/kIJppj3zpB
— News24 (@news24tvchannel) February 4, 2026
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விரைந்து செயல்பட்டு, முக்கியக் குற்றவாளியான தர்மேந்திர தோமர் என்பவரைக் கைது செய்துள்ளனர். அவன் ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், இந்தத் தாக்குதலுக்குப் பயந்து பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பம் வீட்டைப் பூட்டிவிட்டு எங்கோ தலைமறைவாகிவிட்டனர். அவர்களைக் கண்டுபிடித்து பாதுகாப்பு வழங்கவும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களைப் பிடிக்கவும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
