இந்திய ரயில்வேயில் தனது மகனுக்கு வேலை கிடைத்ததை மிகவும் வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார் ஒரு தந்தை. மகனின் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், தனது வீட்டிற்கு அப்படியே ஒரு ரயில் பெட்டியைப் போன்ற தோற்றத்தில் வர்ணம் பூசியுள்ளார். நீல நிறப் பின்னணி, ஜன்னல் கம்பிகள் மற்றும் ‘இந்திய ரயில்வே’ என்ற எழுத்துக்கள் என அந்த வீடு பார்ப்பதற்கு அசல் ரயில் பெட்டி போலவே காட்சியளிக்கிறது.
இந்தத் தந்தையின் அன்பு மற்றும் படைப்பாற்றல் இப்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. தற்போது இணையத்தில் உலா வரும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “அங்கிள் உண்மையிலேயே செம கிரியேட்டிவ்!” என்று பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
“>
மேலும் மகனின் சாதனையை வெறும் இனிப்பு கொடுத்துக் கொண்டாடுவதுடன் நிறுத்தாமல், வாழ்நாள் முழுவதும் அந்தப் பெருமை நிலைத்திருக்கும் வகையில் வீட்டை மாற்றியமைத்த தந்தையின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. கடின உழைப்பால் அரசு வேலை பெற்ற மகனுக்கும், அதைத் தத்ரூபமாக வெளிப்படுத்திய தந்தைக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
