சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு சிறுமியிடம் திருநங்கை ஒருவர் பணம் கேட்டுள்ளார். சிறுமி பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த திருநங்கை, தான் வாயில் வைத்திருந்த குட்காவை அந்த சிறுமியின் மீது துப்பியுள்ளார். இந்த அருவருப்பான செயலால் அந்த இடமே பதற்றமடைந்தது.

இந்த அநாகரிகமான செயலை அங்கிருந்தவர்கள் கண்டித்த போதிலும், அந்த திருநங்கை சிறுமியை மிரட்டும் தோரணையில் நடந்து கொண்டார். இந்தச் சம்பவம் அங்கிருந்த ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டது. தான் செய்த செயல் வெளியே தெரிந்துவிடும் என்று பயந்த அந்த திருநங்கை, வீடியோ பதிவு செய்தவரை மிரட்டி, அந்தப் பதிவை வலுக்கட்டாயமாக அழிக்கச் செய்துள்ளார்.

“>

இருப்பினும், இந்த வீடியோவின் சில பகுதிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுமக்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட அந்த திருநங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.