தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விமர்சித்து அதிமுக ஐடி விங் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ள அடுத்தடுத்த பதிவுகள் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, விஜய்யின் அரசியல் புரிதல் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள அதிமுகவினர், “அரசியலில் நல்லவர்களாகவோ அல்லது வல்லவர்களாகவோ இருக்கலாம், ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத ஒருவராக இருந்துவிடக் கூடாது” என்று மிகக் காட்டமாகச் சாடியுள்ளனர். இன்றும் தனது இயக்குநரின் பேச்சைக் கேட்டு நடக்கும் ஒரு நடிகராகவே விஜய் இருக்கிறார் என்றும், தனது சொந்த ரசிகர்களையே ஏமாற்றும் விதமாக அவரது செயல்பாடுகள் இருப்பதாகவும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
பனையூர் பண்ணையார் அவர்களே,
ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் @actorvijay ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.
'மத்திய அரசிற்கு அடிமை'…
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) January 25, 2026
மேலும், அதிமுக குறித்து விஜய் மேடையில் பேசிய கருத்துக்கள் அனைத்தும் யாரோ எழுதிக்கொடுத்ததை மனனம் செய்து ஒப்புவிக்கும் “ஒன்னா நம்பர் குப்பை” என்று அதிமுக ஐடி விங் மிகக் கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்துள்ளது. “அறிவாலய குப்பையோடு, பனையூர் குப்பையையும் சேர்த்து ஒட்டுமொத்தமாகத் தமிழக அரசியலில் இருந்து கூட்டியெறிவோம்” என்று அவர்கள் விடுத்துள்ள முழக்கம், அதிமுக – தவெக இடையிலான மோதலை உச்சகட்டத்திற்குத் தள்ளியுள்ளது. விஜய்யின் அரசியல் முதிர்ச்சியின்மையைச் சுட்டிக்காட்டி அதிமுகவினர் முன்வைத்துள்ள இந்த விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
