சமூக ஊடகங்களில் ரீல்கள் தயாரித்து பிரபலமாக வேண்டும் என்ற ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிலர் உயிரையே ஆபத்தில் இட்டுவிடும் விதத்தில் செயல்படுகின்றனர். தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ இதற்குச் சான்றாக உள்ளது.

அந்த காட்சியில், ஒரு இளம் ஜோடி கால்வாய் அருகே நிற்கிறது. தண்ணீர் பலமாக ஓடும் நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு ஒரே நேரத்தில் ஆற்றில் குதிக்கிறார்கள். காட்சியை பார்த்தால் தற்கொலை செய்யும் போல தோன்றும் நிலையில் அவர்கள் விழுகின்றனர். அருகில் நின்றிருந்த பலர் பார்த்துக்கொண்டிருந்ததுடன், ஒருவரோ அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்தார். அதிர்ஷ்டவசமாக, இருவரும் பாதிப்பின்றி கரை சேர்ந்தனர்.

இந்த வீடியோ X தளத்தில் @imnatasha09 என்ற கணக்கில் பகிரப்பட்டு, “வாழ்க்கையைப் பற்றி கவலையில்லை, தண்ணீரைப் பற்றிய பயமில்லை… ரீல்கள்தான் முக்கியம்” என்ற தலைப்புடன் வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் பார்த்து கருத்துகள் பதிவு செய்யத் தொடங்கினர். ஒருவரின் கருத்தில், “அற்புதமான நாடகம் நடக்கிறது” என எழுத, மற்றொருவர், “நான் இறந்தாலும் ரீல் தயாரிப்பதை நிறுத்த மாட்டேன்” என சாடினார். மேலும், “ரீல்களின் போதை இன்னும் என் கனவுகளில் இருந்து போகவில்லை” என நையாண்டியாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

“>

 

இந்த சம்பவம், சமூக ஊடகப் புகழுக்காக மக்கள் எவ்வளவு ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதையும், உயிரின் மதிப்பை அலட்சியப்படுத்துகின்றனர் என்பதையும் வெளிப்படுத்துகிறது. நிபுணர்கள், இதுபோன்ற ஸ்டண்ட்கள் உயிருக்கு ஆபத்தானவை என்றும், அதை பின்பற்றாமல் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.