சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, தற்பெருமை மற்றும் ஆபத்தான ஸ்டண்ட்கள் சில நேரங்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படுத்துகிறது.

அந்த காட்சியில், ஒரு இளைஞன் ஸ்கூட்டி ஓட்டிக்கொண்டிருக்கும் போது ஆபத்தான முறையில் இருக்கை நிலையை மாற்றி, பின்னோக்கி அமர்ந்து கைப்பிடியைப் பிடித்துக் கொள்கிறார். பின்னர் தனது டி-ஷர்ட்டை கழற்றி, ஹீரோ  போல் சுழலும் போஸ் கொடுத்து, மீண்டும் முன்னோக்கி திரும்புகிறார். ஆரம்பத்தில் எதுவும் நடக்காத நிலையில், சில நேரம் கழித்து மீண்டும் ஸ்டண்ட் செய்ய முயன்றபோது அவர் சமநிலையை இழந்து கீழே விழுந்து காயமடைந்தார்.

இந்த வீடியோ X தளத்தில் @sopir_idiot என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்டு, குறுகிய நேரத்தில் 2.7 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. காட்சியை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளனர். ஒருவர், “இரத்தம் தெரியவில்லை, ஆனால் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “இது ஒரு பெரிய பாடமாக இருக்கும்” என சாடியுள்ளார். மேலும், “இனி இவர் இப்படிச் செய்ய மாட்டார்” என நையாண்டி செய்த பயனர்களும் உள்ளனர்.

“>

 

நிபுணர்கள், இத்தகைய ஆபத்தான ஸ்டண்ட்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்பதையும், சமூக ஊடகப் புகழுக்காக தங்கள் பாதுகாப்பை புறக்கணிக்கக் கூடாது என்பதையும் எச்சரிக்கின்றனர். பொழுதுபோக்கிற்காக செய்யும் சில செயல்கள், வாழ்க்கையை மாற்றும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் இந்த சம்பவம் நினைவூட்டுகிறது.