மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு பயண சலுகையில் விமான டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளை மத்திய அரசு தற்போது மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி BLCL, ATT மற்றும் ஐ ஆர் சி டி சி இணையதள பக்கத்தின் மூலமாக சென்று முன் பதிவு செய்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% கூடுதல் கொடுப்பனவுடன் விமான கட்டண சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு M/s Balmer Lawrie & Company Limited, M/s Ashok Travels & Tours மற்றும் Indian Railway Catering and Tourism Corporation Limited  ஆகிய பயண முகவர்களிடம் விமான விவரங்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள நிலையில் இந்த சிறப்பு விமான சலுகைகளை பயன்படுத்தி அரசு ஊழியர்கள் NER, ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட இடங்களுக்கு நேரடியாக விமானத்தில் பயணிக்கலாம். ஆனால் அரசு ஊழியர்களுக்கான சலுகையை பயன்படுத்த முடியவில்லை என்றால் விமான விவரங்களை பிரிண்டவுட் எடுத்து அதற்கான சலுகையை கிளைம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.