மத்திய அரசு ஊழியர்கள் பல வருடங்களாக பிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான அகவிலைப்படி உயர்வு ஒருமுறை வெளியான நிலையில், மற்றொரு உயர்வு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ஊழியர்களுக்கு இம்முறை 4% அகவிலைப்படி அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுதவிர அவர்களது குறைந்தபட்ச ஊதியத்தையும் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் மற்றொரு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது, ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஃபிட்மென்ட் ஃபாக்டர் உயர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.