உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சேமிக்க விரும்பினால், பொது வருங்கால வைப்புநிதியில்(PPF) முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதன் வாயிலாக நல்ல லாபம் கிடைக்கும். PPF கணக்கு விதிகளின் அடிப்படையில், உங்களுக்கும் உங்களது மைனர் குழந்தைக்கும் ஒரு கணக்கை திறக்க அனுமதிக்கிறது. பெற்றோர்களாகிய நீங்கள் ஏன் உங்களது பிள்ளைக்கு PPF கணக்கை திறப்பதற்கான சில காரணங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

அதாவது, PPF கணக்கு துவங்கப்பட்ட நிதி ஆண்டின் முடிவிலிருந்து 15 வருடங்கள் லாக்-இன் காலத்துடன் வருகிறது. ஆகவே உங்கள் குழந்தையின் சிறு வயதின் ஆரம்பத்திலேயே நீங்கள் ஒரு PPF கணக்கைத் திறந்தால், அவர் வேலை செய்ய தொடங்கும் நேரத்தில் (அ) மேஜராகும் போது (அதாவது, 18 வயதை அடையும்போது) கணக்கு முதிர்ச்சியடைந்திருக்கும்.