தற்போது ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால் வரி செலுத்துவோர் சுமூகமான மற்றும் துல்லியமான சமர்ப்பிப்பை உறுதிசெய்ய தேவையான தயாரிப்புகளை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். தனிப்பட்ட வரிசெலுத்துவோர் மற்றும் தணிக்கை தேவையில்லாதவர்களுக்கு வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்குரிய காலக்கெடு ஜூலை 31 ஆகும். சம்பளம் வாங்கும் நபர்கள் படிவம் 16-ஐ சமர்ப்பிக்க வேண்டும். அதோடு வரி விலக்குகள் தொடர்பான படிவம் 16-ல் தகவலை சரிபார்க்கவும்.

இதில் வீட்டுவாடகை கொடுப்பனவு (HRA) மற்றும் விடுப்பு பயண உதவி (LTA) உள்ளிட்ட விலக்கு வருமானம் அடங்கும். பின் படிவத்தை துல்லியமாக மதிப்பாய்வு செய்வது, அனைத்து விலக்குகள் மற்றும் முதலீடுகள் சரியாக கருதப்படுவதை உறுதி செய்வது அவசியம் ஆகும். பிழைகள் (அ) குறைபாடுகள் இருப்பின், வரிகளை தாக்கல் செய்யும்போது உரிய நடவடிக்கை மற்றும் சரியான விலக்குகளுக்கு உங்கள் முதலாளி (அ) வரி ஆலோசகரிடம் தெரிவிக்க வேண்டும். படிவம் 16-ல் உள்ள மொத்த சம்பளம், கழித்தலுக்கு பின் சம்பளச் சீட்டுகள் (அ) வங்கிக்கணக்கு வரவுகளுடன் பொருந்துகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.