நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பணவீக்கமும் விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. பணவீக்கம் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொழிற்சாலைகள், பெரிய உற்பத்தி அலகுகள், இயங்கும் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு வேலைகளில் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் போக்குவரத்து சாதனங்களில் பயன்படுத்தப்படும் எரிப்பொருளின் விலை குறைக்கப்பட்டால், பணவீக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்த இயலும் என பல வணிக நிபுணர்கள் நம்புகின்றனர். இதனிடையே பெட்ரோல் லிட்டருக்கு 1.50 ரூபாய் மட்டுமே விற்கும் நாடு இருக்கிறது என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பல்வேறு ஊடக அறிக்கைகளின் படி, வெனிசுலாவில் பெட்ரோல் மிகவும் மலிவாக கிடைக்கும். அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.1.50-க்கு வாங்கிக்கொள்ளலாம்.