இந்தியாவின் மிகப் பெரிய மெட்ரோ நிலையமான டெல்லியில் பல்வேறு விநோத சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. அதை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வைரலாவதும் வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் (ஜூன் 18) டெல்லி மெட்ரோவில் பயணித்து கொண்டிருந்த ஒரு பெண் ஹேர் ஸ்ட்ரெய்ட்னரைப் (hair straightener) பயன்படுத்துவதை காட்டும் புது வீடியோ சமூகஊடகங்களில் வைரலாகியது.

டெல்லி மெட்ரோவில் நடைபெற்ற தொடர் விநோத சம்பவங்கள் அண்மையில் தலைப்புச் செய்தியாக வந்ததை அடுத்து இந்த வீடியோவும் அதனுடன் இணைந்துள்ளது. வீடியோவில் மெட்ரோ ரயிலில் ஒரு இளம்பெண் ஹேர் ஸ்ட்ரெய்ட்னரை பயன்படுத்துகிறார். அந்த வீடியோவிலுள்ள அப்பெண் மற்ற பயணிகளுடன் நின்று தன் தலைமுடியை நேராக்குவதை பற்றி எதுவும் நினைக்கவில்லை. இதுகுறித்த வீடியோ வைரலானதை அடுத்து பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.