இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் பிக்சட் டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். இப்படி பணத்தை சேமிப்பதற்கு ஏராளமான திட்டங்கள் இருந்தும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் தான் மிகவும் சிறப்பான பலன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தில் தினமும் 100 ரூபாய் சேமிப்பதன் மூலமாக வருடத்திற்கு 36, 500 ரூபாயை சேமிக்கலாம்.

இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடங்கள். விருப்பம் இருந்தால் அதன் பிறகு ஐந்து வருடங்கள் அதிகரித்துக் கொள்ளலாம். மேலும் 7.1% வட்டி இந்த தொகைக்கு வழங்கப்படுகிறது. 15 வருடத்தின் முடிவில் ரூ.9.89 லட்சம் கிடைக்கும். 25 வருடங்கள் கழித்து ஓய்வு பெறும்போது இப்பணத்தை எடுத்தால் 25 லட்சம் கிடைக்கும். ஆனால் அதற்காக ரூ.9,12,500 வைப்பு நிதியாக செலுத்த வேண்டியது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.