மேற்குவங்க மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் பழங்கள் மற்றும் கோழிக்கறி வழங்க அந்த மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த திட்டமானது ஜனவரி முதல் ஏப்ரல் வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை கூறுகையில், பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் ஏற்கனவே அரிசி சோறு, பருப்பு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறி, சோயா பீன்ஸ், முட்டை ஆகிவை வழங்கப்பட்டு வருகிறது.

அதோடு வாரம் ஒரு முறை கோழிக்கறியும், அந்த பருவத்தில் கிடைக்கும் பல வகையும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 317 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தொடருமா என்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை. மேற்கு வங்கத்தில் இந்த வருடம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது பெரும் விமர்சனங்களை பெற்று வருகிறது