நடப்பு கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையதளம் மூலமாக பதிவேற்றுவதற்கான கால அவகாசம் ஜனவரி 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய மருத்துவர் ஆணையம் தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் நீட் தேர்வு தகுதி அடிப்படையில் மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். நடைபாண்டில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், மதிப்பெண் விவரம் மற்றும் இட ஒதுக்கீடு விவரம் உள்ளிட்ட அனைத்தையும் என் எம் சி இணைய பக்கத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கான பகுதியில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.