இந்தியாவில் 2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தற்போது 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்  தாக்கல் செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜனவரி 31-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது வருமான வரி குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி வருமான வரி விலக்கு வரம்பை 2.5 லட்சத்திலிருந்து 5 லட்ச ரூபாயாக உயரக்கூடும் என்று ஐஏஎன்எஸ் அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் சாமானியர்கள் பயனடைவார்கள். அதன் பிறகு வருமான வரி செலுத்துவதற்கு ஆயுள் காப்பீட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலக்கின் அளவு அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 80 சி இன் கீழ் கிடைக்கும் முதலீட்டு வரம்புகளும் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.