தர்மபுரி மாவட்டத்திலுள்ள ரேகடஅள்ளி அண்ணாநகர் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு தகராறு செய்த மாரியப்பனை அவரது குடும்பத்தினர் கண்டித்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த மாரியப்பன் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாரியப்பனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.