மணிப்பூர் விவகாரம் பற்றிப் பேசும் மக்கள், கரூரில் நடந்த சம்பவம் குறித்து ஏன் விஜய்யிடம் கேள்வி கேட்பதில்லை என சரத்குமார் ஆவேசமாக வினவியுள்ளார். “விஜய்யை முதலில் வீட்டை விட்டு வெளியே வந்து பேசச் சொல்லுங்கள்” என நேரடி சவால் விடுத்த அவர், மாநாட்டு மேடையில் யாரோ எழுதிக் கொடுத்ததைத்தான் விஜய் வாசித்தார் என்றும், அதைத் தாண்டி அவருக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

​மேலும், நடிகர்களைப் பார்க்கக் கூடும் கூட்டத்தைப் பற்றிப் பேசிய சரத்குமார், “நாளைக்கு வடிவேலு, ரஜினி அல்லது அஜித் என யார் வந்தாலும் கூட்டம் சேரும், ஆனால் அந்தக் கூட்டம் அப்படியே ஓட்டுகளாக மாறாது” என்று எதார்த்தமாகக் கூறினார். மக்கள் எப்போதும் ஒரு கட்சியின் கொள்கையைப் பார்த்துதான் வாக்களிப்பார்களே தவிர, வெறும் முகத்தைப் பார்த்து ஓட்டுப் போட மாட்டார்கள் என்று அவர் மிக ஸ்ட்ராங்காகத் தெரிவித்துள்ளார்.