விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் மற்ற சீரியல்களைப் போல இல்லாமல் பாக்கியா எவ்வளவு குடும்ப தடைகள் வந்தாலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வருகின்றார். இருந்தாலும் கோபி இதை அனைத்தையும் கண்டு கொள்ளாமல் இரண்டாவது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.

தினந்தோறும் புதுவிதமான திருப்புங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் பாக்கியாவின் பெண்ணாக நடித்து வரும் இனியா சீரியலில் பிஸியாக இருந்தாலும் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி தற்போது மணப்பெண் போல அலங்காரம் செய்து கொண்டு ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் பதிவிட்டு உள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சீரியலில் வரும் சின்ன பொண்ணா இது என்று திகைத்துப் போய் உள்ளனர்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Nehah Rajesh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@_nehah_official_)