திமுகவினரின் சொத்து பட்டியல் விவரம் என அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு மட்டும் ரூ.2010 கோடி சொத்து இருப்பதாகவும், அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என்.நேரு, கனிமொழி, சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியலையும் வெளியிட்டார். மேலும், திமுகவின் சொத்துப் பட்டியல் விவகாரம் தொடர்பாக சிபிஐயில் இன்று புகார் அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘எல்லா துறைகளும் மத்திய அரசின் கையில் தான் உள்ளது. அண்ணாமலை வெளியிட்டபடி யாரேனும் விதிமீறலில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம். அதனால் மடியில் கனம் இல்லை, வழியில் பயமில்லை என்ற உணர்வுடன் தான் திமுகவினர் உள்ளனர்’ என்றார்.