தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலமாக தினமும் பால் மட்டும் இல்லாமல் பால் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை மக்கள் நம்பிக்கையுடன் தினமும் வாங்குகிறார்கள்.  இந்நிலையில் வருகிற தீபாவளிக்கு ஆவின் நிறுவனம் இனிப்புகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஆவின் நிறுவனம் ரூபாய் 450 க்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு இனிப்பு தொகுப்பை வழங்க உள்ளது.

அந்த சிறப்பு தொகுப்பில், 250கி காஜீகட்லீ ரூ. 260க்கும், 250 கி நட்ஸ் அல்வா ரூ.190க்கும், 250கி மோத்தி பாக்  ரூ.180க்கும், 250 கி காஜூ பிஸ்தா ரோல் ரூ. 320க்கும், 250 கி  நெய் பாதுஷா  ரூ. 190க்கும் combo box 500 கிராம் ரூ. 450க்கும் விற்பனை செய்யப்பட  உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.