மகரம் ராசி அன்பர்களே

இன்று தனிமை விரும்பிகளாக காணப்படுவீர்கள். இன்று முதல் ராசியில் சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சில பணிகளை எச்சரிக்கையுடன் மேற்கொள்வது நல்லது .துணிந்து எடுக்கும் முடிவுகளில் வெற்றி இருக்கும். பொருளாதார சீராக இருக்கும். நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். சந்திராஷ்டமும் முடியும் வரை கவனமாக இருப்பது நல்லது.

இன்று முக்கிய செலவுக்காக வைத்திருந்த பணம் கரையும். பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது நல்லது. இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியை உற்சாகமும் காணப்படும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். பெண்கள் இன்று சின்ன சின்ன குழப்பங்கள் கொள்வீர்கள். பிள்ளைகளால் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்படலாம் கவலை வேண்டாம். வீட்டு தேவைகள் அதிகரிக்கும்.

இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஆசிரியர்களின் சொல் கேட்டு நடந்து கொள்ளுங்கள். சக மாணவர்களை அனுசரித்து செல்லுங்கள். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிஷ்ட எண்  :  மூன்று ஐந்து மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்   :  வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்