மகரம் ராசி அன்பர்களே,

இன்று பன்முக திறமை கொண்டவராக காணப்படுவீர்கள். வெற்றி மீது வெற்றியை ஏற்படுத்திக் கொள்ள முடியும். துணிந்து எடுத்த முடிவால் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வருங்கால நலன் கருதி ஈட்டிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். குடும்ப நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

மாற்றுக் கருத்து உடையவர்கள் மனம் மாறுவார்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களால் நன்மை நடக்கும். மன கஷ்டம் குறையும். வழக்கு விவகாரங்களில் கவனமாக இருப்பது நல்லது. இன்று பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். நினைத்த வாழ்க்கை கண்டிப்பாக அமையும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். யோசித்து சில முடிவுகள் எடுக்க வேண்டும். கல்வி மீது அக்கறை கொள்ள வேண்டும். படித்து முன்னேற வேண்டும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்