கும்பம் ராசி அன்பர்களே,

இன்று கண்டிப்பாக எல்லா விதத்திலும் மகிழ்ச்சி இருக்கும். காரியங்களை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். வெற்றி செய்திகள் வீடு தேடி வரும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். சாத்தூர்யமான பேச்சால் வியாபாரம் விருத்தி அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அழைச்சல் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வதால் அன்பு அதிகரிக்கும்.

உறவினர்களின் வருகை இருக்கும். பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். மன அமைதியுடன் காரியங்களில் ஈடுபட்டால் முன்னேற்றம் ஏற்படும். திட்டம் தீட்டி சில பணிகளில் ஈடுபடுவது நல்லது. மன அழுத்தம் விலகி செல்லும். வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். இன்று மாணவர்கள் சிந்தனையை ஒருநிலைபடுத்த வேண்டும்.

கவலைப்படாமல் எதிலும் ஈடுபட வேண்டும். முயற்சிகள் மூலம் முன்னேற்றம் இருக்கும். கல்வி மீது முழு அக்கறையுடன் செயல்பட வேண்டும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 1, 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்