உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தின் டான்கோலி என்ற கிராமத்தில், அர்ச்சனா என்ற இளம் பெண் தனது மாமியார் மற்றும் கணவரின் தொடர்ந்து நடக்கும் துன்புறுத்தலால் சலித்து, வீட்டின் 2ம் மாடியில் இருந்த  நேரடியாக கீழே குதித்த கொடூரம் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த தருணத்தில் கூட அவரது கணவர் “குதி” என வாய்விட்டுஇரக்கம் இல்லாமல் கூறியுள்ளார், அதுமட்டும் இல்லாமல் மற்ற குடும்பத்தினரும் தடுக்காமல் திட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக  கூறப்படுகிறது. தரையில் விழுந்ததும் வலியால் துடித்துக்கொண்டிருந்த மனைவியை  கூட விட்டு வைக்காமல்  கணவர் சோனு இரக்கமின்றி அடித்ததாகப் பகிரங்கமாக வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை பக்கத்து வீட்டு நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், அது தற்போது பரவலாகப் பரவி வருகிறது.

அர்ச்சனாவுக்கு திருமணம் ஆனது ஆறு ஆண்டுகளுக்கு முன். அவருக்கு இரு பிள்ளைகள் – ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஆனால் திருமண வாழ்வில் ஆரம்பத்திலிருந்தே, மாமியார் நேஹ்னி தேவி, மாமனார் பிரேம்பால், கணவர் சோனு, மைத்துனர்கள் பிரமோத், துர்கேஷ் ஆகியோர் ₹5 லட்சம் பணம் மற்றும் புல்லட் மோட்டார் சைக்கிள் வரதட்சணையாகக் கோரி துன்புறுத்தியதாக அர்ச்சனாவின் சகோதரர் புகார் அளித்துள்ளார்.

மைத்துனரின் தீய நோக்கம் பற்றியும், மனைவியின் மீதான பாரபட்சத்தையும் அவர் கூறியுள்ளார். அந்த வீடியோவில் அர்ச்சனாவின் குழந்தைகள் அலறி அழும் சத்தமும் பதிவாகியுள்ளது.

“>

இந்த சம்பவம் குறித்து போலீசார் விரைந்து விசாரணை தொடங்கியுள்ளனர். தற்போது அர்ச்சனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை தற்போது ஓரளவிற்கு சீராக  இருப்பதாக மருத்துவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. , போலீசார் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை எதிர்த்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தி, மக்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது போன்ற வரதட்சணை மற்றும் குடும்பத்தலைவர்களின் மனம் வருந்தவைக்கும் செயல்களை சட்டம் கடுமையாக எதிர்கொள்ள வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.