கோடைக்கால வெயிலில் தணிவுக்கு மக்கள் ஜூஸ் கடைகளை நாடுகிறார்கள். ஆனால் அவற்றில் தயாரிக்கப்படும் சாறு உண்மையில் சுத்தமா, புதிய பழங்களால்தானா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவும் ஒரு வீடியோவில், ஒரு ஜூஸ் கடைக்காரர் பழையதும் அழுகியதும் பூச்சிகள் காணப்படும் மாதுளைப் பழங்களில் இருந்து ஜூஸ் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது பதிவு செய்யப்பட்டுள்ளது.
View this post on Instagram
“>
அந்த வீடியோவில், ஒரு வாடிக்கையாளர் மாதுளையின் மோசமான நிலையைக் காட்டி, “இவை 4 நாளைக்கு முந்தைய பழம் போல இருக்கு” எனக் கூறுகிறார். கூடவே, பழங்களை உரித்த பிறகு கழுவாததையும், சாறு வடிகட்டப்படாமலேயே கிளாஸ் மூலம் ₹60-₹70 வரை வசூலிக்கப்படுவதையும் வலியுறுத்துகிறார்.
இந்த சம்பவம் பொதுமக்களில் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறை இது போன்ற ஜூஸ் கடைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் வலுத்தாக்கம் உருவாகி வருகிறது.
