உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு  சாலை சந்திப்பில் உள்ள போலீஸ் உதவிக்கூடத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

காவலர் ஒருவர் இருக்க வேண்டிய இடத்தில், ஒரு மதுபோதையிலான இளைஞர் ‘போலீஸ் தொப்பியை  (police cap) மேசையிலிருந்து எடுத்து, போலீஸ் அதிகாரி  போலவே தலையில் போட்டுகொண்டு தலை நிமிர்ந்து  உட்கார்ந்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் அவர் மீது ஆத்திரமடைந்தாலும், அவர் கேட்காமல் போலீசாகவே நடித்து வந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவத் தொடங்கியதோடு, போலீசாரின் அலட்சியத்தையும் இணையவாசிகள்  கேள்வி எழுப்பியுள்ளனர்.

“>

 

பின்னர் இது குறித்து போலீசாரிடம் விசாரித்தபோது, அந்த இளைஞர் மசுவான்பூர் பகுதியைச் சேர்ந்த ஷீலு என்பதும், போதை மாத்திரை அல்லது மது குடித்து உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த நேரத்தில் அருகில் சாலை விபத்து ஒன்றுக்கு போலீசார் சென்று இருந்ததால், அவர்களின் மேசையில் இருந்த தொப்பியை எடுத்துக்கொண்டு அவர் நடிக்க ஆரம்பித்துள்ளாராம்.

இதனைக் கண்ட போலீசார், அவரை கைது செய்து, சமூக அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியது என்ற அடிப்படையில்  நடவடிக்கை எடுத்துள்ளனர். “மதுபானத்தில் சுவை உள்ளவர்கள், போலீசராகவே மாறிடுவாங்க போல” என நெட்டிசன்கள் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.