பொதுமக்கள் அதிகமாக நடமாடும் வீதியில், வயதான நபர் ஒருவர் சுவரொட்டியில் (Poster) இருந்த பெண்ணின் படத்தை அநாகரிகமான முறையில் முத்தமிட்டு, நக்கிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த பொதுமக்களையும் கடும் அதிர்ச்சியிலும், கண்டனத்திலும் ஆழ்த்தியுள்ளது.

அந்த நபர் இந்த வக்கிரமான செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவரைச் சுற்றி சிறுமிகளும் நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படும் தகவல், சமூக ஆர்வலர்களிடையே மேலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ​பெண்களை மரியாதையுடனும், பாதுகாப்புடனும் நடத்த வேண்டிய இந்தச் சமூகத்தில், பொது இடத்தில் அரங்கேறிய இந்த அநாகரிகமான சம்பவம் பெண்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பு குறித்தே பெரிய கேள்விக் குறியை எழுப்பியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த காணொளி எக்ஸ் (X) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வரும் நிலையில், சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் பொது இடத்தில் வக்கிரமாக நடந்துகொண்ட அந்த நபர் மீது காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கொந்தளிப்புடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.