உடம்பை ஃபிட்டாக வைக்க ஜிம்முக்குச் செல்வது நல்லது என்றாலும், சில நேரங்களில் அங்கு நடக்கும் விபரீதங்கள் பயத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு இளைஞர் ஜிம்முக்குள் நின்று கொண்டு தன் மார்பு தசைகளையும் உடலமைப்பையும் ஒரு பாடிபில்டர் போலக் காட்ட முயன்று அதைத் தன் மொபைலிலும் பதிவு செய்கிறார்.

ஆனால், அவர் தன் மார்பை அப்படி பலவந்தமாக விரித்த அடுத்த சில நொடிகளிலேயே, திடீரென நிலைதடுமாறி முகம் குப்புற தரையில் சுருண்டு விழுகிறார். இதைப் பார்த்ததும் ஜிம்மில் இருந்தமற்றவர்கள் பதறியடித்து ஓடிவரும் இந்த வீடியோ, இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த வாலிபருக்கு இப்படி மயக்கம் வந்ததற்குக் காரணம் என்ன என்பது பற்றி சோசியல் மீடியாவில் விவாதம் கிளம்பியுள்ளது.

<a href=”http://

“>

சிலர் அவர் போலி புரோட்டீன் பவுடர்களைப் பயன்படுத்தியதுதான் காரணம் என்று குற்றம் சாட்ட, வேறு சிலரோ மார்பை அளவுக்கு அதிகமாகத் தேக்கி வைக்கும்போது உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் இப்படி நடக்கும் என்று கூறுகின்றனர்.

உடலுக்கு அளவுக்கு அதிகமாக வேலை கொடுப்பதும், திடீரென ரத்த அழுத்தம் குறைவதுமே இந்த மயக்கத்திற்குக் காரணம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கும் நிலையில், இந்த வீடியோ உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.