கடந்த வருடம் அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த  ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தது. மேலும் நூற்றுக்கணக்கானவர்களை பிணைக்கதிகளாகவும் சிறை பிடித்தது .போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதம் உள்ளவர்களையும் மீட்போம் என்று கூறி வருகிறது.

காசா மீது இஸ்ரேல் தற்போது போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீன சிறுவன் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தயவுசெய்து போரை நிறுத்துங்கள். இங்கு மனிதர்களை பார்க்க முடிவதில்லை. எங்களுக்கு என்று எதுவும் இல்லை. காசாவில் மக்கள் மடிந்து வருகிறார்கள். ஆனால் உலகம் எங்களிடம் பொய் சொல்லி வருகிறது. அவர்களது ஆக்கிரமிப்பு என்று கூறி வருகிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையை சொல்வதில்லை என்று அழுதபடியே கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Eye On Palestine (@eye.on.palestine)