இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களது மொபைல் போன் கவருக்கு பின்னால் ரூபாய் நோட்டுகள் அல்லது ஏடிஎம் கார்டுகளை வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சாதாரணமாகத் தோன்றும் இந்த விஷயம் எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை விளக்குகிறது இந்தச் செய்தி. பொதுவாக ஸ்மார்ட்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்தும்போதோ அல்லது சார்ஜ் செய்யும்போதோ வெப்பம் உருவாகும்.
போன் கவரில் வைக்கப்படும் ரூபாய் நோட்டுகளில் உள்ள ரசாயனங்கள், அந்த வெப்பத்தை வெளியேற விடாமல் தடுத்து போனுக்குள்ளேயே தேங்கச் செய்கின்றன.
இதனால் பேட்டரி அதிக வெப்பமடைந்து மொபைல் வெடிக்கவோ அல்லது தீப்பிடிக்கவோ வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதேபோல், மொபைலில் உருவாகும் காந்தப்புலம், உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளில் உள்ள மேக்னடிக் சிப்களைச் சேதப்படுத்தி கார்டுகளைச் செயலிழக்கச் செய்யக்கூடும்.
எனவே, போன் கவரை ‘பர்ஸ்’ போலப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, பணப்பையைத் தனியாகப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.
